The Path - வழி

If you believe that your life will end with death, nothing that you think, feel, or do has any meaning. Everything will end with incoherence and disintegration.
உங்கள் வாழ்க்கை இறப்புடன் முடிந்து போகும் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் என்ன நினைத்தாலும், உணர்ந்தாலும், செய்தாலும் அதற்கு அர்த்தமில்லை. ஓவ்வொன்றும் ஒத்திசைவில்லாமலும் பிரிந்தும் சிதைந்து முடிந்து விடும்.

If you believe that your life does not end with death, you must bring into agreement what you think with what you feel and what you do. All must advance toward coherence, toward unity.
உங்கள் வாழ்க்கை இறப்புடன் முடிவதில்லை என்று நம்பினால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்டிப்பாக ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவை அனைத்தும் ஒரு ஒத்திசைவை நோக்கி கட்டாயம் முன்னேறும்.

If you are indifferent to the pain and suffering of others, none of the help that you ask for will find justification.
மற்றவர்களின் வலியையும், துன்பத்தையும் கண்டும் காணாமல் இருந்தால், நீங்கள் கேட்கும் எந்த ஒரு உதவியையும் நியாயப்படுத்த முடியாது.

If you are not indifferent to the pain and suffering of others, in order to help them you must bring your thoughts, feelings, and actions into agreement.
மற்றவர்களின் வலியையும் துன்பத்தையும் கண்டும் காணாமல் இல்லாது, அவர்களுக்கு நீங்கள் உதவி செய்வதற்க்கு எண்ணம், உணர்வு, செயல் மூன்றையும் கட்டாயம் ஒரு உடன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

Learn to treat others in the way that you want to be treated.
மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, நீங்களும் அதுபோல் மற்றவர்களை நடத்த கற்றுக் கொள்ள வேண்டும்.

Learn to surpass pain and suffering in yourself, in those close to you, and in human society.
உங்களுக்கும், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் மற்றும் மனித சமுதாயத்திற்கும் ஏற்படும் வலி மற்றும் துன்பங்களை கடந்து செல்ல நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

Learn to resist the violence that is within you and outside of you.
உனக்குள் உள்ள வன்முறையையும், வெளியில் உள்ள வன்முறையையும் எதிர்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.

Learn to recognize the signs of the sacred within you and around you.
உனக்குள்ளும் உன்னைச் சுற்றியும் உள்ள புனிதத்தைக் குறிக்கும் வி\யங்களை அடையாளம் காண கற்றுக் கொள்ள வேண்டும்.

Do not let your life pass by without asking yourself, “Who am I?”
“நான் யார்?” என்ற கேள்வியை உனக்குள் நீ கேட்காமல் உனது வாழ்க்கையை கடந்து போக விடாதே.

Do not let your life pass by without asking yourself, “Where am I going?”
“நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்” என்ற கேள்வியை உனக்குள் நீ கேட்காமல் உன் வாழ்க்கையே கடந்து போக விடாதே.

Do not let a day pass by without giving an answer to yourself about who you are.
“நீ யார்” என்ற கேள்விக்கு விடை காணாமல் ஓரு நாள் கூட கடந்துபோக விடாதே.

Do not let a day pass by without giving an answer to yourself about where you are going.
“நீ எங்கே போய் கொண்டிருக்கிறாய்” என்ற கேள்விக்கு விடை காணாமல் ஓரு நாள்” கூட கடந்து போக விடாதே.

Do not let a great joy pass without giving thanks internally.
உனக்குள் நீ நன்றி கூறாமல் ஒரு பேரானந்தத்தை கடந்து போக விடாதே.

Do not let a great sadness pass without calling into your interior for the joy that you have saved there.
உன் அகத்தில் சேமித்துள்ள ஆனந்தத்தை வெளிக்கொண்டுவராமல் ஓரு பெருந்துயரத்தை கடந்து போக விடாதே.

Do not imagine that you are alone in your village, in your city, on the Earth, or among the infinite worlds.
உனது கிராமத்தில், நகரத்தில், இந்த பூமியில் மற்றும் முடிவற்ற உலகங்களின் மத்தியில் நீ தனியாக உள்ளாய் என்று கற்பனை செய்யாதே.

Do not imagine that you are enchained to this time and this space.
நீ இந்த நேரத்தாலும், இடத்தாலும் கட்டப்பட்டுள்ளதாக கற்பனை செய்யாதே.

Do not imagine that in your death loneliness will become eternal.
முடிவுற்ற தனிமை உனது இறப்பில் ஏற்படும் என்று கற்பனை செய்யாதே.